Thursday, 15 March 2012

Let’s Be happy and Don’t cry for anything


விதி என்னும் எழுத்து விழிநீரினால் அழியாது ஆனால் மகிழ்ச்சியில் அது மறைந்து போகும்.
                                -Let’s Be happy and Don’t cry for anything

Monday, 12 March 2012

தனிமை


என்னை பிடுங்கி என்னில் திருத்தி நடப்பட்ட நடவு. 

Tuesday, 6 March 2012

வரம் வேண்டும்

பிறக்கும் போது வலியை கொடுத்துவிட்டேன், பிறந்த பிறகாவது என் தாய்க்கு மகிழ்வை மட்டும் கொடுக்கும் வரம் வேண்டும்.

கோழை மனிதன்


தோற்றுவிட்டேன் நான், வாழ்கை என்னும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் மறைவைத்தேடி மண்ணுக்குள் சென்றதால், விதை அல்ல நான் விழுந்தாலும் எழுவதற்கு.
                  -கோழை மனிதன்

மரம் வளர்ப்போம்



என் வீட்டின் கூரையின் ஓட்டையை அடைக்க மரங்களை வெட்டினேன், என் நாட்டின் கூரையில் ஓட்டை விழுவதை அறியாமல்.
                              -மரம் வளர்ப்போம்

காதல்


உன் பார்வையின் ஈரத்தால் என் மனதில் பூத்த காதல் பூ மணம் வீசுவதற்குள் நீ மணம் முடித்துவிட்டாய். உதிரவில்லை என் பூ பறிக்கப்பட்டது.

தலை எழுத்து


எழுத்தறிவித்த இறைவன், அவன் எழுதிய எழுத்துக்களை மட்டும் அறிவிக்க மறந்துவிட்டான்
      -தலை எழுத்து

Followers