Thursday, 2 August 2012


சிறகுகள் இல்லை ஆனாலும் பறக்கிறேன் உயர, சிறகாய் உன் காதல் என்னுடன் இருப்பதால்.
எழுத்து –விபீஷணன்


மரம் வளர்ப்போம், மழை பேறுவோம்!
கறையும் பறவையாக விண்ணில் விதி உலா, என்னை காற்று அடித்தல், வலியில் கண்ணீர் சிந்தி மறைந்துவிடுவேன். என் பிறப்பால் பல உயிர்கள் வாழ்கிறது மண்ணில்.
            -மழையாகும் மேகம்

உன்னை காயப்படுத்த வேண்டும் என்று எனக்கு விருப்பம் இல்லை, ஆனால் உன்னை காயப்படுத்தாவிடில் எனக்கு வேறு அடைக்கலாம் இல்லை
- மரம் கொத்தி

கனவு
      கண்களை இருளவைத்து, வாழ்க்கைக்கு ஒளிரூட்டம் ஒரு கருப்பு கண்ணாடி.
      எழுத்து விபீஷணன்

அன்பின் வெளிப்பாட்டால் உருவான நாம், அன்பை வெளிப்படுத்த மறுப்பதேன்
                                                            Love All
                                                                        With  Love Vibee

என் சிந்தையில் சிலந்தி வலை, பின்னியது அவள், சிக்கியது நான்.
            எழுத்து விபீஷணன்

வலியும் சுகமானது, நான் உன்னை தடவும்போது....!
    -தைலமே I love you ha ha ha
                        எழுத்து விபீஷணன்

மரம் வளர்ப்போம், மழை பேறுவோம்!
கறையும் பறவையாக விண்ணில் விதி உலா, என்னை காற்று அடித்தல், வலியில் கண்ணீர் சிந்தி மறைந்துவிடுவேன். என் பிறப்பால் பல உயிர்கள் வாழ்கிறது மண்ணில்.
            -மழையாகும் மேகம்

உறக்கம் இல்லை ஆனாலும் கண்களை மூடி பயணம் வாழ்க்கை
ஆழ்ந்த உறக்கம் விழிக்க நினைக்கிறேன் முடியவில்லை மரணம்
                  எழுத்து விபீஷணன்

என்னை இயக்கும் இயந்திரமும் நீ தான், என்னுள் இயங்கும் இயக்கமும் நீதான், என்னை எனக்கு அறிமுகம் செய்தாய், உன் நினைவுகளால், உணர்ந்தறியேன் இப்படி ஓர் உணர்வினை இதுவரை என் வாழ்வில். என்னை அறியாமல், எனக்குள் எத்தனை சிறகுகள் உதிர்ந்து துளிர்கின்றன தினம் தினம் பல வண்ணங்களில்.
                              எழுத்து விபீஷணன்

Thursday, 15 March 2012

Let’s Be happy and Don’t cry for anything


விதி என்னும் எழுத்து விழிநீரினால் அழியாது ஆனால் மகிழ்ச்சியில் அது மறைந்து போகும்.
                                -Let’s Be happy and Don’t cry for anything

Monday, 12 March 2012

தனிமை


என்னை பிடுங்கி என்னில் திருத்தி நடப்பட்ட நடவு. 

Tuesday, 6 March 2012

வரம் வேண்டும்

பிறக்கும் போது வலியை கொடுத்துவிட்டேன், பிறந்த பிறகாவது என் தாய்க்கு மகிழ்வை மட்டும் கொடுக்கும் வரம் வேண்டும்.

கோழை மனிதன்


தோற்றுவிட்டேன் நான், வாழ்கை என்னும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் மறைவைத்தேடி மண்ணுக்குள் சென்றதால், விதை அல்ல நான் விழுந்தாலும் எழுவதற்கு.
                  -கோழை மனிதன்

மரம் வளர்ப்போம்



என் வீட்டின் கூரையின் ஓட்டையை அடைக்க மரங்களை வெட்டினேன், என் நாட்டின் கூரையில் ஓட்டை விழுவதை அறியாமல்.
                              -மரம் வளர்ப்போம்

காதல்


உன் பார்வையின் ஈரத்தால் என் மனதில் பூத்த காதல் பூ மணம் வீசுவதற்குள் நீ மணம் முடித்துவிட்டாய். உதிரவில்லை என் பூ பறிக்கப்பட்டது.

தலை எழுத்து


எழுத்தறிவித்த இறைவன், அவன் எழுதிய எழுத்துக்களை மட்டும் அறிவிக்க மறந்துவிட்டான்
      -தலை எழுத்து

Wednesday, 18 January 2012

நம்பிக்கை


குளத்து நீர் வற்றினாலும், வாழ்வோம் சிறிதுகாலம் நம் கண்ணீரை கொண்டு.
- குளத்து மீன்கள்

Followers